சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது, தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல என தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலை கையக்ப்படுத்த தமிழகஅரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகஅரசின் அதிகாரத்தைக்கொண்டு, அந்த கோவிலை நிர்வகித்து வரும் தீட்சிதர்களுக்கு எதிரான நடவடிக்கையில இறங்கி வருகிறது. கோவில் கணக்கு வழக்குகளை அறநிலையத்துறை அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து, பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. மேலும் தீட்சிதர்கள் மீது அவதூறுகளையும் கூறி, காவல்துறையினநடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், செய்தியாளக்ரளை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தவறு எங்கு நடந்தாலும், அதை தட்டிக்கேட்கின்ற, சுட்டிகாட்டுகின்ற கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அதிகார துஷ்பிரயோகம், அத்துமீறல் செய்யவில்லை. சிதம்பரம் நடராஜர் கோவில் ஒன்று தீட்சிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல, நம்மை ஆண்ட மன்னர்களால், முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. தீட்சிதர்களுக்கு சொந்தமானதல்ல
சிதம்பரம் நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமானது. திருக்கோவில் வருமானங்கள் குறித்து கேட்கின்றபோது கணக்கு காட்டுவதும் பதில் அளிப்பதும், அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. கோவிலின் உள்ளே மானாவரியாக இஷ்டத்திற்கு கட்டிடங்களை கட்டி எழுப்பி இருக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தீட்சிதர்கள் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் அரசு சந்திக்க தயார் என்றார்.