சிதம்பரம்:
சிதம்பரத்திலிருந்து நெய்வேலி சென்ற அரசு பேருந்தும், புவனகிரி வந்த தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 50க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று மாலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து அரசு பேருந்து நெய்வேலி நோக்கி வந்துகொண்டு இருந்தது. புவனகிரி அருகே உள்ள வண்டுராயன்பட்டு என்னுமிடத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கல்லூரி பேருந்தில் பயணம் செயத்ந 8 மாணாக்கர்களுக்கும், அரசு பஸ்சில் பயணம் செய்த 42 பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி செய்யப்பட்டது. இந்த விபத்தில் தனியார் கல்லூரி பஸ் டிரைவரின் கால் முறிந்ததது.
இந்த விபத்து குறித்து புவனகிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.