சிகாகோ
கடும் குளிரில் தவிக்கும் வீடற்ற மக்கள் தங்க விடுதி அறைகளை வாடகைக்கு எடுத்து ஒரு பெண் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் தற்போது வரலாறு காணாத அளவுக்கு குளிர் உள்ளது. உஷ்ணம் உறை நிலைக்கு கீழே மைனசில் உள்ளது. குறிப்பாக சிகாகோ நகரில் மைனஸ் 25 மற்றும் மைனஸ் 26 டிகிரி வரை உஷ்ணம் குறைந்துள்ளது. சிகாகோ நகரில் தெரு ஓரம் பல வீடற்ற மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல வருடங்களாக கூடாரம் அமைத்து அதில் வசிக்கின்றனர்.
ஆனால் தற்போது உறைபனிக்கும் கீழே குளிர் உள்ளதால் அவர்களால் அங்கு தங்க முடியவில்லை. அவர்களின் துயரைத்தை கண்ட ஒரு அமெரிக்கப் பெண் மிகவும் துயருற்றார். ரியல் எஸ்டேட் துறையில் தரகராக பணிபுரியும் அந்த காண்டிஸ் பேனே என்னும் 34 வயதுப் பெண் கருப்பர் இனத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவர் உடனடியாக விசாரித்து அங்கிருந்து ஆம்பர் இன்ன் என்னும் தங்கும் விடுதியில் 30 அறைகள் காலியாக இருப்பதை அறிந்தார் அந்த அறைகளை தலா $70 என்னும் வாடகையில் பதிவு செய்தார். அந்த மக்களை அங்கு அழைத்துச் செல்ல தந்து இன்ஸ்டாகிராம் நண்பர்களை வேண்டினார். அவர்கள் அவருக்கு தங்கள் வாகனங்களை அளித்து உதவினார்கள்.
அத்துடன் அவர் பலரிடமும் இதற்காக உதவிகளை கோரினார். அத்துடன் அவர்களுக்கு தன்னிடம் இருந்த பணத்தின் மூலம் உணவு, மற்றும் முக்கிய பொருட்களை வாங்கிக் கொடுத்தார். இந்த தகவல் பரவவே மக்களில் பலரு காண்டிசுக்கு உதவ ஆரம்பித்துள்ள்னர்.
இது குறித்து காண்ட்ஸ் பேனே, “நான் இதுவரை இவர்களுக்காக $4700 வரை செலவு செய்துள்ளேன். அதற்கு மேல் பணமில்லாத போது பலரும் எனக்கு உதவ முன் வந்தனர். அவர்கள் வாடகை மற்றும் உணவுப் பொருட்களாக எனக்கு உதவி செய்துள்ள்னர்.
ஒரு சாதாரண கருப்பின பெண்ணான எனக்கு இவ்வளவு பேர் உதவுவார்கள் என நான் நினைக்கவில்லை. இது ஒரு தற்காலிக உதவி மட்டுமே. நிரந்தர உதவிக்காக நாங்கள் இல்லினாய்ஸ் மாநில கவர்னரை அணுக உள்ளோம். அனைவரும் ஒன்று சேர்ந்து முயன்றால் இது நிச்சயம் நடைபெறும்” என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.