சிகாகோ

சிகாகோவில் உள்ள ஒரு உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் முப்பரிமாண முறையில் உருவாக்கப்பட்ட சிறிய அளவிலான மனித இதயத்தை வெளியிட்டுள்ளது.

                                                 மாதிரிப் புகைப்படம்

மனித உடலில் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பல உறுப்புக்கள் உயிர் வாழ அவசியமாகும்.   அத்தகைய உறுப்புக்கள் பாதிக்கப்பட்டால் வேறு ஒருவர் உடலில் இருந்து அதை மாற்றி வைக்க அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன.   சிறுநீரக தானம் என்பது ஒருவருக்கு இரு சிறுநீரகம் உள்ளதால் ஒன்றை தானம் செய்ய முடியும்.   ஆனால் இதயம் போன்ற உறுப்புக்கள் மரணத்துக்கு பிறகே தானம் செய்ய முடியும்.

இவ்வகையில் மனிதர்களுக்குச் செயற்கை உறுப்புக்கள் பொருத்துவது குறித்து சிகாகோவைச் சேர்ந்த பயோலிஃபெட் என்னும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனம் ஆய்வு நடத்தி வருகிறது.   இந்த ஆய்வை இந்நிறுவனத்தின் தலைமை அறிவியல் அதிகாரி ரவி பிர்லா தனது கீழ் உள்ள குழுவின் மூலம் நடத்தி வருகிறார்.  இந்நிறுவனம்  கடந்த 2018 ஆம் தேதி  இதய திசுவைச் செயற்கையாக உருவாக்கியது.

தற்போது செயற்கையாக இருதயம் அமைப்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது.  அதில் ஒரு பகுதியாக முப்பரிமாண முறையில் சிறிய அளவிலான மனித இதயத்தைத் தயாரித்து  வெளியிட்டுள்ளனர்.   இது அளவில் சிறியதாக இருந்தாலும் மனித இதயத்தின் உள்ளே இருக்கும் அனைத்து உறுப்புக்களும் அமைந்துள்ளன.    இதைக் கொண்டு மனித இதயத்தில் உள்ள பாழான திசுக்களை மட்டுமின்றி இதயத்தையே செயற்கையாக அமைத்து மாற்ற முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.