ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் 18வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று, மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. தற்போது 2வது அலை பரவி வருகிறது. இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசிக்கு பணம் வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, பிரதமர் மோடியும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்படுவதாக கூறியதுடன், அதற்கு பணம் வசூலிப்பது குறித்து உறுதியாக ஏதும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், தற்போது தடுப்பூசியின் விலைகளையும், தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் சத்திஸ்கர்ல மாநிலத்தல், 18வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் அறிவித்து உள்ளார்.
பிரதமர் தனது உரையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் இலவச தடுப்பூசி அறிவிப்பார் என்று என எதிர்பார்த்ததாகவும், ஆனால், அதுகுறித்து, பிரதமர் எதுவும் குறிப்பிடவில்லை. அதனால், சத்தீஸ்கரில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான செலவுகள், மாநில அரசால் ஏற்கப்படும் என்று கூறியுள்ளார்.,
மேலும், எங்கள் குடிமக்களின் உயிரைப் பாதுகாக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். போதிய எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]