ண்டன்

டந்த 1964 ஆம் வருடம் 5 பவுண்டுக்கு வாங்கப்பட்ட ஒரு சதுரங்க காய் தற்போது 735000 பவுண்டுக்கு ஏலம் போய் உள்ளது.

ஐரொப்பிய நாகரிகத்தில் ஐந்தாம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் மத்திய காலம் என வழஙக்ப்படுகிறது. இந்த காலகட்டத்தில் பல இனங்களில் ஐரோப்பா சிறந்து விளங்கி வந்தது. அக்காலத்தில் சதுரங்க விளையாட்டு மிகவும் பிரபலமாக இருந்து வந்துள்ளது.

இதற்கான காய்கள் தந்தத்தில் செய்யப்பட்டு வந்தன. சதுரங்கத்தில் ராஜா, ராணி, யானை, மந்திரி, குதிரை, சிப்பாய் என காய்கள் உள்ளன.

இவ்வாறான சதுரங்க காய்களில் சில ஒரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருதன. அதில் ஆறு சிப்பாய் காய்கள் கானாமல் போய் விட்டன் அந்த காய்களில் ஒன்றை லிவிஸ் தீவுகளில் உள்ள மணலில் கிடைத்தது. மற்ற காய்கள் என்ன ஆனதென்று இன்று வரை தெரியவில்லை.

இவ்வாறு கிடைத்த சதுரங்க காயை எடின்பர்க் என்பவரின் பாட்டனார் கடந்த 1964 ஆம் வருடம் 5 பவுண்டுக்கு வாங்கி உள்ளார். அப்போது அவருக்கு இதன் மதிப்பு தெரியவில்லை.

சுமார் 8 செமீ உயரமுள்ள இந்த சதுரங்க காயை அவர் வெறும் அழகு பொருளாக மேஜை மீது வைத்திருந்தார். இவர் நண்பரில் ஒருவர் இந்த சதுரங்க காய் அபூர்வமாக தென்படுவதால் அதை ஏலக் கம்பெனிக்கு எடுத்துச் செல்லுமாறு யோசனை தெரிவித்துள்ளார்.

இதை ஆராய்ந்த அலக்சாண்டர் காடெர் என்னும் நிபுணர் இதன் புராதன மதிப்பை கண்டறிந்து தெரிவித்துள்ளார்.  இந்த சதுரங்க காய் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டவை என கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த சதுரங்க காயை தற்போது ஒருவர் 735000 பவுண்ட் விலைக்கு ஏலம் எடுத்துள்ளார். அவர் தனது பெயரை வெளியில் தெரிவ்க்க அனுமதி அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.