சென்னை: வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் இன்று மாமல்லபுரம் தொடங்குகிறது. ஆகஸ்டு 10ந்தேதிவரை நடைபெற உள்ள செஸ் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகி உள்ளது. இன்று முதல்நாள் போட்டியில் இந்திய ஆடவர் அணி ஜிம்பாம்வே அணியை எதிர்கொள்கிறது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நேற்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரதமர் மற்றும் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. கண்ணை கவரும் வண்ண நிகழ்ச்சிகளுடன் சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. பாரம்பரிய விளையாட்ட திருவிழாவாக பார்க்கபடும் இந்த போட்டி முதல் முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் நடைபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவில் அதிக கிராண்ட் மாஸ்டர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் இருப்பதால், இந்த போட்டியை நடத்தும் உரிமையை தமிழகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று ( ஜூலை 28ம் தேதி ) முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் 189 நாடுகளில் இருந்து சுமார் 2,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்குபெற்கின்றனர். இந்தியாவின் சார்பில் 30 பேர் 6 குழுக்களாக விளையாடவுள்ளனர்.
இந்த போட்டி மற்றும் நிகழ்ச்சியை பொதுமக்கள் தூர்தஷன் சேனலில் நேரலையாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஆன்லைனில் Chessbase India மற்றும் FIDE ஆகிய யூட்டியூப் பக்கங்களில் பார்க்கலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மொத்தமாக 11 சுற்றுகளாக நடைபெறவுள்ளது. அதன்படி நாளை முதல் ( ஜூலை 29 ) ஆகஸ்ட் 9ம் தேதி வரை நாளொன்றுக்கு ஒரு சுற்று என்ற கணக்கில் நடைபெறவிருக்கிறது. தினமும் மதியம் 3 மணிக்கு போட்டிகள் தொடங்கவுள்ளது. இதில் ஆகஸ்ட் 4ம் தேதி மற்றும் ஓய்வு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட்டில் முதல்நாளான இன்று முதல்சுற்று போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தியாவின் ‘A’ அணி ஜிம்பாப்வேவை எதிர்கொள்கிறது.
இன்று மாலை 3மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்திய ஆடவர் அணியின் ஏ பிரிவு செஸ் வீரர்கள் ஹரிகிருஷ்ணன், நாராயணன், விதிக் குஜராத்தி, சசிகிரண், அர்ஜூன் எரிகியாசி ஆகியோர் மோதுகிறார்கள்.
- ஒலிம்பியாட் போட்டி அட்டவணை:
- ஜூலை 29, மாலை 3 மணி: முதல் சுற்று.
- ஜூலை 30, மாலை 3 மணி: 2-வது சுற்று.
- ஜூலை 31, மாலை 3 மணி: 3-வது சுற்று.
- ஆகஸ்ட் 1, மாலை 3 மணி: 4-வது சுற்று
- ஆகஸ்ட் 2, மாலை 3 மணி: 5-வது சுற்று.
- ஆகஸ்ட் 3, மாலை 3 மணி: 6-வது சுற்று.
- ஆகஸ்ட் 4: ஓய்வு நாள்.
- ஆகஸ்ட் 5, மாலை 3 மணி: 7-வது சுற்று.
- ஆகஸ்ட் 6, மாலை 3 மணி: 8-வது சுற்று.
- ஆகஸ்ட் 7, மாலை 3 மணி: 9-வது சுற்று.
- ஆகஸ்ட் 8, மாலை 3 மணி: 10-வது சுற்று.
- ஆகஸ்ட் 9, காலை 10 மணி: 11-வது சுற்று.
- ஆகஸ்ட் 9, மாலை 4 மணி: நிறைவு விழா