வாழ்க்கையில் அதிர்ஷடம் ஒருமுறைதான் கதவை தட்டு என்பார்கள். இயக்குனர் சேரன் வாழ்க்கியிலும் அதுநடந்தது. தளபதி விஜய் படம் இயக்கும் வாய்ப்பாக அது வந்தது அதை அவர் தவறவிட்டார்.
அதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் சேரன் கூறியிருப்பதாவது:
ப்ரார்த்தனா தியேட்டரில் படம் பார்த்துவிட்டு போனில் விஜய் அவர்கள் பாராட்டியதை மறக்க முடியாது. அதற்கு பின் அவர் என்னோடு சேர்ந்து படம் செய்யவும் ஒத்துக்கொண்டார். நான் தான் தவமாய் தவமிருந்து படம் முடிக்காமல் இருந்ததால் இயக்க முடியாமல் போயிற்று.
அந்த தவறை நான் செய்திருக்க கூடாது. இந்த தயாரிப்பாளர் பாதிக்கப்படுவாரே என நினைத்து விஜய் படத்தை அன்று கைவிட்டது எவ்வளவு பெரிய தவறு என இப்போது உணர்கிறேன். இந்த தவறுக் கான வருத்தத்தை விஜய் அவர்களை பார்த்து நேரில் சொல்லிவிட நினைக்கி றேன். ஆனால் நேரில் சந்திக்கும்போது தெரிவிப்பேன். அவரிடம் ஆட்டோ கிராஃப் கதை சொன்ன 3 மணி நேரம் மறக்கமுடியாதது..
ஒரு அசைவின்றி ஒரு போன் இன்றி என் முகத்தை மட்டும் பார்த்து கதை கேட்ட அந்த தன்மை. வாவ்… கிரேட். இடையில் அவர் கேட்ட ஒரே வார்த்தை தண்ணீர் வேணுமா அண்ணா மட்டும்தான். அவ்வளவு டெடிகேஷன். அதுவே இன்று அவரின் உயரம்
இவ்வாறு சேரன் தெரிவித்திருக்கிறார்.