‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சி முடிவுக்கு வந்தும் கவின் – லாஸ்லியா காதலுக்கு சேரனின் நிலைப்பாடு குறித்து பலரும் பல்வேறு கருத்துகள் தெரிவித்து வந்தார்கள்.

கவின் – லாஸ்லியா ரசிகர்கள் தொடர்ந்து இயக்குநர் சேரனை ஆபாசமாக திட்டி வந்தார்கள். இந்த சர்ச்சையை தொடர்ந்து இருவரது பெயரும் இனிமேல் என் நாவில் வராது என்று காட்டமாகத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார் சேரன்.ஆனாலும் அவரை திட்டுவது ஆபாசமாக பதிவு செய்வதை தொடர்பாளர்கள் நிறுத்தவில்லை .

ஒருவரின் மனதை எந்தவகையில் காயப்படுத்தினாலும் அது குற்றமே.. சோஷியல் நெட்வொர்க் என்ற பெயரில் அத்துமீறி ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்யும்நிலை வளர்ந்துவிட்டது..
சிலரின் மனதில் காட்டுப்பேயாய் குடியேறியிருக்கும் இச்செயலை வன்மையாக கண்டிக்கிறோம்..
#CheranFansAgainstCyberBullying என பதிவிட்டுள்ளார் .

மேலும் “போலி ஐடி உபயோகித்து அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்வைச் சிதைக்கும் முயற்சியில் அல்லது காயப்படுத்தும் முயற்சியில் இறங்கும் குற்றவாளிகள் இனிமேல் நிறுத்திக்கொள்ளட்டும். மனரீதியாக ஒருவரைப் பாதிக்கவைப்பது என்பது பெரும் குற்றம் என்பதை உணரட்டும் என பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]