சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு,  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பார்வையாளராக, கேரள மாநில காங்கிரஸ் தலைவர்  ரமேஷ் சென்னிதாலா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, வேட்புமனு தாக்கல்  ஜனவரி 28ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய  பிப்ரவரி 4ந்தேதி கடைசி நாள்.. பிப்ரவரி 5ந்தேதி வேட்பு மனு பரிசீலனையும், பிப்ரவரி 7ந்தேதி வேட்புமனு வாபஸ் பெறும் நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதிப்பங்கீடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில்,  தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த பார்வையாளராக அரசியல் அனுபவம் மிக்க கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஸ் சென்னிதலா நியமிக்கப்பட்டு உள்ளார்.  இதை அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளார்.