சென்னனை: சென்னை மக்களின் நீண்டநாள் கனவான மின்சார பேருந்து சேவையை தொடங்க தமிழ்நாடுஅரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கான முக்கிய பேருந்து பணிமனைகளை மேம்பபடுத்தும் பணியை தொடங்கி உள்ளது. இதனால் , காற்று மாசு காரணமாக சுகாதார பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சென்னைவாசிகளு்ககு விரைவில் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் போக்குவரத்துத் துறை தலைகீழாக மாற்றும் முக்கியமான எலக்ட்ரிக் பஸ் திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என மக்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே டெல்லி, பெங்களூர் உட்பட நாட்டின் முக்கியமான நகரங்களில் எலக்ட்ரிக் பஸ் பயன்பாடு மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ள வேளையில், தற்போது சென்னையில் அதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (MTC), உலக வங்கி நிதியுதவியுடன் புதிய மின்சார பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இ இத்திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ. 959 கோடி ஆகும், இதில் 70 சதவீத தொகையை உலக வங்கி வழங்குகிறது, எஞ்சியுள்ள தொகையை மாநில அரசு அளிக்கிறது.
இத்திட்டத்தின் கீழ், குறைந்த தரைதள உயரம் கொண்ட 500 மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கடந்த ஜனவரியில் வெளியிடப்பட்டது. தற்போது மின்சார பேருந்துக்கு தேவையான வசதிகள் சார்ஜிங் யூனிட் போன்ற வசதிகளை ஏற்படுத்த ரூ.111.50 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ளது.
உலக வங்கி நிதியுதவி இயக்கப்படும் இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், குறைந்த செலவில் இயங்கக்கூடிய 100 ஏசி மற்றும் 400 ஏசி அல்லாத மின்சார பேருந்துகளைக் கொள்முதல் செய்ய MTC திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் திறக்கப்பட்டு, இந்த (ஆகஸ்ட் மாதம்) இறுதியில் அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்தில் டெண்டர் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, அடுத்த சில மாதங்களில், குறைந்த பட்சம் ஆறு மாதங்களில் மின்சார பேருந்துகளை நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு டெலிவரி தொடங்கும். எனவே, அடுத்த வருட தொடக்கத்தில் சென்னையில் மின்சார பேருந்துகள் இயக்கத்துக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பேருந்து வழித்தடங்கள் மற்றும் பேருந்துகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க டெப்போக்கள் மற்றும் பேருந்துகளுக்கு தேவையான மின்வசதியை சார்ஜ் செய்வதற்கான சார்ஜிங் யூனிட்கள் போன்றவை நிறுவ இடம் காணப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்க உள்ளது.
அதன்படி, சென்னையில் உள்ள முக்கிய ஆறு டெப்போக்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெரம்பூர்-II, தொண்டியார்பேட்டை-I, வியாசர்பாடி, பூந்தமல்லி, KK நகர்-I, மற்றும் பெரும்பாக்கம்-I ஆகிய இடங்களில் உள்ள டெப்போக்களில் 500 இ-பேருந்துகளை சார்ஜ் செய்து பராமரிக்கும் வசதிகளை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) ஏற்படுத்துகிறது.
இதன்மூலம் சென்னைவாசிகளின் மின்சார பேருந்து கனவு விரைவில் உண்மையாகும் நிலை உருவாகி உள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு