சென்னை:

நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை முதல் மக்கள் எப்போதும்போல, எந்தவித பயமுமின்றி, சாதாரணமாக உலாவி வருகின்றனர். இரு சக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்… இதனால், கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது…

இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், இருசக்கர வாகனங்களும், 4 சக்கர வாகனங்களும் அதிக அளவில் செல்வதைக் கண்ட அந்த பகுதி போக்குவரத்துகாவல் துறையினர், அவர்களை மடக்கி வேண்டுகோள் விடுத்தனர்..

சென்னை அண்ணாசாலை  ஸ்பென்சர் சாலை அருகே, அந்த பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சாலையில் வரும் வாகன ஓட்டிகளிடம், கையெடுத்து  கும்பிட்டு தயவு செய்து வெளியே வராதீர்கள் , உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் , புரிந்து கொள்ளுங்கள் என்று உருக்கமாக என கோரிக்கை விடுத்தார்.

ஆனால், பெரும்பாலோர் அவரது கதறலை கண்டுகொள்ளாமலே சென்று வந்தனர்…

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டடு இருந்தும், அதிகாலையிலேயே டீ கடைகளில் எப்போதும்போல மக்கள் கூட்டம் அலைமோதியது கண்கூடகா காண நேர்ந்தது… அதுபோல, தெருக்கள் தோறும் ஏராளமான பெட்டிக் கடைகள் முதல் சூப்பர் மார்க்கெட் வரை அனைத்தும் திறந்தே காணப்படுவதால், மக்கள் எப்போதும்போல தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்…

ஊரடங்காவது… கத்திரிக்காயாவது… 

Video credit: polymer news

வட மாநிலங்களில், தடையை மீறி செல்பவர்களை காவல்துறையினர் லத்தியால் விளாசும் வீடியோ வைரலாகி வருகிறது.. அதுபோல நமது மாநிலத்திலும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தால்தான் வீட்டில் முடங்கிக் கிடப்பார்கள்போலும்…

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டுவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…