சென்னை:
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் தீவிரப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே கொரோனா கிளஸ்டராக இருந்த கோயம்பேடு சந்தை மூடப்பட்ட நிலையில், சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5262 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், குடிசைப் பகுதி மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் இலவசமாக மாஸ்க் வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
அதன்படி சென்னையில் அமைந்துள்ள 650 குடிசைப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 26 லட்சம் மக்களுக்கு தேவையான 50 லட்சம் மறு உபயோகப்படுத்தும் வகையான முகமூடிகளை இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும், குடிசைப் பகுதி மக்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவதோடு, முகமூடிகளை அணிய வும், சமூக தூரத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகர கொரோனா சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.