சென்னை: நாளை – ரேஷன் குறை தீர்ப்பு முகாம்! நடைபெறும் இடங்கள் விவரம்!

Must read

சென்னை,
ரேஷன் பொருட்களை வாங்குவதில் உள்ள குறைபாடுகளை நீக்க சென்னையில்  நாளை முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பொதுமக்கள் முகாமில் கலந்துகொண்டு ரேஷன் பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் சிரமங்கள் மற்றும் பெயர் மாற்ற, விலாசம் மாற்றம் போன்றவற்றை மாற்றம் செய்ய  அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
 
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ration-card
ரேஷன் அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சென்னையில் 17 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக பல்வேறு மையங்களில் மாதாந்திர பொது வினியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் 12–ந் தேதியன்று (நாளை) காலை 10 மணி முதல் ஒரு மணி வரை நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது வினியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்த குறைகள் இருந்தால் அதை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முகாம் நடைபெறும் இடங்கள்
இந்த முகாம்கள் நடக்கும் இடங்களின் விபரம் வருமாறு.
 மண்ணடி – சிதம்பரனார் மியாசி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி. 113, அங்கப்பன் தெரு,
ராயபுரம்  – ராஜகோபால் மேல்நிலைப்பள்ளி, ஜி.எம். பேட்டை;
பெரம்பூர்  – சென்னை நடுநிலைப்பள்ளி, கோபாலபுரம், திரு.வி.க. நகர்;
அண்ணாநகர்  – சென்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளைமேடு நெடுஞ்சாலை;
அம்பத்தூர் – நகராட்சி உயர்நிலைப்பள்ளி, சாவடி தெரு, கொரட்டூர்;
வில்லிவாக்கம் –  நடேசன் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், சாந்தி காலணி, அண்ணா நகர் (மே)
திருவொற்றியூர் – ஜெயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி;
ஆவடி –  அண்ணா சமுதாயக்கூடம், மேல்பாக்கம், வெள்ளச்சேரி, கதவூர்;
தியாகராயநகர் – அரசு மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம், (புதூர்) 3–வது அவன்யூ, அசோக்நகர்,
மைலாப்பூர் –  புனித ரபேல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, 18/2, கச்சேரிசாலை;
பரங்கிமலை – ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகர திருமண மண்டபம், பாலகிருஷ்ணாபுரம் பிரதான சாலை, ஆதம்பாக்கம்;
தாம்பரம்  – லிடியா மெட்ரிகுலேசன் பள்ளி, கஸ்பாபுரம், அகரம்;
சைதாப்பேட்டை –  சைதாப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 112கோடம்பாக்கம் நெடுஞ்சாலை
ஆயிரம் விளக்கு – அரசு மேல்நிலைப்பள்ளி, நந்தனம் விரிவு, 5–வது மெயின் ரோடு, நந்தனம்;
சேப்பாக்கம் – சென்னை மாநகராட்சி சமுதாய கல்லூரி, அருணாச்சலம் தெரு, சேப்பாக்கம்;
சோழிங்கநல்லூர் –  சென்னை மாமன்ற உறுப்பினர் அலுவலகம், (195–வது வார்டு) கண்ணகி நகர். 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article