
சென்னை:
ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ், சென்னையில் வசித்த வீடு, தற்போது விற்பனைக்கு வந்திருக்கறது.
என்.டி.ராமராவ் தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். ஆனால் நடிக்க வந்த ஆரம்ப காலத்தில், சென்னை ரங்கராஜபுரம் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் வாடகைக்கு இருந்தார்.

பிறகு திரையுலகில் வளர்ந்து வசதியான பிறகு, 1953ம் வருடம் சென்னை தி.நகர் பசுல்லா சாலையில் ஒரு வீட்டை வாங்கினார். 8,000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வீடு நடிகர் கஸ்தூரி சிவாராவ் என்பவருக்கு சொந்தமானதாக இருந்த்து.
இங்கு குடியேறிய என்.டி.ராமாராவ், முதல் தளத்தில் குடும்பத்துடன் வசித்தார். கீழ் தளத்தில் அலுவலகம், மேக்கப் அறை, வரவேற்பாளர் அறை ஆகியவை இருந்தன. பிறகு குடும்பத்துடன் ஐதராபாத்தில் குடியேறினார்.
அவர் வசித்த வீட்டைப் பார்ப்பதற்காகவே தெலுங்கு ரசிகர்கள் சென்னைக்கு வருவது உண்டு.
தற்போது விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
[youtube-feed feed=1]