சென்னை:  சென்னையில்  உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலான ஹயாத் ஓட்டலின் லிப்ட் அறுந்து விழுந்து ஊழியர் உயிரிழந்த சம்பம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலை யில்,  தனியார் ஓட்டல் தலைமை பொறியாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை தேனாம்​பேட்டை அண்ணா அறி​வால​யம் அரு​கில் பிரபல நட்​சத்​திர விடுதி ஹயாத். உலக புகழ்பெற்ற இந்த நட்சத்திர விடுதியானது.  18 மாடிகள் உயரமானது மற்றும் மொத்தம் 327 அறைகளைக் கொண்டுள்ளது, இதில் 21 சூட்கள் அடங்கும், மேலும் சுமார் 56,000 மீ 2 (600,000 சதுர அடி), பரப்பளவைக் கொண்டுள்ளது,  24 மணி நேர லவுஞ்சான லாபி லவுஞ்ச், ஹோட்டல் ஏட்ரியத்தின் கீழ் உட்புற பசுமையான நிலப்பரப்பின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் நகரத்தை நோக்கிய வெளிப்புற நீச்சல் குளமும் உள்ளது, மேலும் தனிப்பயனாக்கப்பட்ட கலை நிறுவல்கள் மற்றும் பசுமையான நிலப்பரப்பின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது.  தேசிய மற்றும் சர்வதேச கலைஞர்களால் உருவாக்கப்பட்ட நாட்டில் பொதுவில் காட்சிப்படுத்தப்பட்ட கலை நிறுவல்களின் மிகப்பெரிய தொகுப்புகளில் ஒன்று இந்த ஹோட்டலில் உள்ளது.

இந்த நட்சத்திர விடுதியின் பின்​புறம் உள்ள லிஃப்ட் பழுதடைந்து இருந்​த​தால், அதை அகற்ற விடுதி நிர்வாகம் நடவடிக்கை எடுத்​தது. இதையடுத்​து, பெரியமேடு பழைய இரும்பு வியாபாரி அப்​துல் காதர் என்​பவர், அந்த லிஃப்டை அகற்று​வதற்​காக, ஷியாம் சுந்​தர்​(34), வினோத் உள்​ளிட்ட ஊழியர்​களை  விடு​திக்கு அழைத்து வந்துள்ளார் . அவர்கள் மூலம் லிப்ட் அகற்றும் பணி நடைபெற்று வந்தது. இதில், பழுதடைந்திருந்த அந்த லிப்ட்  அறுந்து விழுந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த  ஊழியர் உயிரிழந்தார். ஷியாம் சுந்​தர் கீழே நின்று கொண்​டிருந்தபோது, வினோத் உள்​ளிட்​டோர், மாடி​யில் இருந்து லிஃப்ட்டை கீழே இறக்​கினர். அப்​போது, எதிர்​பா​ராத வித​மாக, லிஃப்ட் அறுந்​து, கீழே நின்று கொண்​டிருந்த ஷியாம் சுந்​தர் மீது விழுந்​துள்ளது. இதில் அவர் சம்பவ இடத்​திலேயே உடல் நசுங்கி உயி​ரிழந்​தார்.

இந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு விரைந்து வந்த‘ தேனாம்​பேட்டை போலீ​ஸார், ஷியாம் சுந்​தர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக ஓமந்​தூ​ரார் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வி​சா​ரணை நடந்து வரும் நிலையில், தனியார் ஓட்டல் தலைமை பொறியாளர் உள்பட 2 பேர் கைது செய்துள்ளனர்.