புதுடெல்லி: ஐதராபாத் அணி நிர்ணயித்த 172 ரன்கள் இலக்க‍ை நோக்கி ஆடிவரும் சென்னை அணி, 11 ஓவர்களில், விக்கெட் இழப்பின்றி 100 ரன்களை சேர்த்து ஆடிவருகிறது.

துவக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாடும், டூ பிளசிஸும் ஆடிவருகின்றனர். இதில் டூ பிளசிஸ் அரைசதம் அடித்துள்ளார். 32 பந்துகளை சந்தித்த அவர், 1 சிக்ஸர் & 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களை அடித்துள்ளார்.

ருதுராஜ், 34 பந்துகளை சந்தித்து, 6 பவுண்டரிகளுடன், 48 ரன்களை அடித்து களத்தில் உள்ளார். தற்போதைய நிலையில், சென்னை அணி மிகவும் வலுவாக இருக்கிறது.

தற்போதைய நிலையில், வெற்றிக்கு, 54 பந்துகளில், 72 ரன்களை எடுக்க வேண்டியுள்ளது. முழுவதுமாக 10 விக்கெட்டுகள் கையில் உள்ளன. எனவே, ஐதராபாத் அணி, சென்னையின் சிலபல விக்கெட்டுகளை அடுத்தடுத்து சாய்த்தால் ஒழிய, வெல்வது மிகவும் கடினம் என்ற சூழல் உள்ளது.