சென்னை

ற்போது சென்னையில் 20 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக உள்ள குளிர் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாகக் கனமழை பெய்து வந்தது.  தற்போது மழை குறைந்துள்ள நிலையில் குளிர் கடுமையாக உள்ளது.  தமிழகம் முழுவதும் தற்போதுள்ள கடும் குளிரால் மக்கள் தவித்து வருகின்றனர்.  தற்போது சென்னையில் 20 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக் குளிர் உள்ள நிலையில் தமிழகம் எங்கும் மேலும் குளிர் அதிகரிக்கும் எனத் தனியார் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தனியார் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இரவு நேரங்களில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைவாக இருக்கும். வடக்கு உள் மாவட்டங்கள், கிழக்கு மாவட்டங்களில் குளிர் கடுமையாக இருக்கும் என்றும் 15 முதல் 17 டிகிரி வரை செல்சியஸ் வெப்பநிலை இருக்கும்.

தலைநகர் சென்னையில் 18 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும். இது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வரை இந்த வெப்பநிலை நீடிக்கலாம்.  ஆகவே சென்னை உள்படத் தமிழக மக்கள் குளிரில் இருந்து பாதுகாத்துக்கொள்ளத் தயாராகிக் கொள்ள வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது.