சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி முதல்வரை மாணவர்கள் தாக்கியதில், அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
கல்லூரிக்குள் நுழைந்த மாணவர்களை அவர் சோதனையிட்டபோது இந்த அசம்பாவித சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் குறித்து 6 கல்லூரிகளைச் சேர்ந்த 36 மாணவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்.
முன்னதாக இன்று சென்னை கல்லூரி மாணவர்கள் பஸ்டே கொண்டாடினார்கள். இந்த பஸ் டே கொண்டாடக்கூடாது என்று நீதிமன்று உத்தரவு இருக்கிறது. இதை மீறித்தான் இன்று காலை சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார்கள். அதே போல மதியம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் மதியம் பச்சையப்பன் கல்லூரிக்குள் கும்பலாக மாணவர்கள் நுழைய முனைந்தார்கள். அவர்களை தடுத்து அடையாள அட்டையை காண்பிக்கும்படி முதல்வர் கலைராஜ் கேட்டார்.
அப்போது அவர் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே கற்களை வீசியதாக 6 கல்லூகளைச் சேர்ந்த 36 மாணவர்களை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறாரர்கள்.