சென்னை:

மிழகத்திற்கு மதப்பிரசாரம் செய்ய வந்த குஜராத் தப்லீக் ஜமாத் அமைப்பினர் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் சென்னை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம்,  டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கூட்டம் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள்  பங்கேற்ற நிலையில், தமிழகத்தில் இருந்தும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று வீரியமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மதப்பிரசாரம் செய்ய வந்த  குஜராத் தப்லீக் ஜமாத் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்த 39 பேர் குஜராத்தில் இருந்து கடந்த 9ம் தேதி சென்னைக்கு வந்து, பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள ஜமாத்தில் தங்கி மத பிரச்சாரம் மேற்கொண்டு வந்துள்ளனர்.

இவர்களின் மூத்தவரான 80 வயதுடைய நபருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருடன் தங்கியிருந்த 39 பேரையும் சுகாதாரத்துறையினர், சென்னை  கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.