சென்னை,
தீவிபத்தில் பாதிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிக்கப்படுகிறது. இன்று மாலை இடிக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் உள்ளே செல்ல முடியாததால் தரை தளத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அத்துடன் மொட்டை மாடியில் சிக்கி இருந்த 14 ஊழியர்களை ‘ஸ்கை லிப்ட்’ எந்திரத்தை பயன்படுத்தி பத்திரமாக மீட்டனர்.
தரைத்தளத்தில் பிடித்த தீ தொடர்ந்து அனைத்து தளங்களின் உள்பகுதிகளிலும் எரிந்து கொண்டு இருந்தது. தொடர்ந்து 2 நாளாக தீ எரிந்துவருவதால் ஏற்பட்ட கடும் வெப்பத்தன் காரணமாக, கட்டிடத்தில் ஆங்காங்கே வெடிப்பும், விரிசல்களும் ஏற்பட்டன.
இதைத்தொடர்ந்து அருகிலுள்ளவர்கள் அப்பகுதியில் இருந்த வெளியேற்றப்பட்டனர். அந்அத பாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் வெப்பம் காரணமாக கடையின் 4 மாடிகள் இடிந்ததாலும், கட்டிடத்தின் வடக்கு, கிழக்கு பகுதியிலும் கட்டிடத்தில் பெரிய விரிசலும், ஒரு சில இடங்கள் பெயர்ந்தும் விழுந்தன.
இதன் காரணமாக உருக்குலைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடித்து தள்ள அரசு முடிவு செய்துள்ளது.
இன்று மதியம் தீ விபத்துக்குள்ளான கட்டிடத்த பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார், கட்டிடம் இடிக்கும் பணி இன்று பிற்பகல் தொடங்கும் என கூறினார்.
அதைத்தொடர்ந்து, சென்னையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் பயன்படுத்தி வரும், ‘ஜாக் கட்டர்’ என்ற நவீன எந்திரம் வரவழைக்கப்பட்டு உள்ளது.
இந்த கருவி மூலம், அருகில் கட்டிடங்கள் பாதிப்புக்கு உள்ளாதவாறு இடிப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும், 3 நாட்களில் இடிப்பு பணி முடிந்து விடும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கட்டிடத்த இடிக்கும் பணிக்கான செலவு தொகை முழுவதும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
கட்டடிடம் இடிக்கப்படுவதை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.