சென்னை: சென்னையில் உள்ள பல எஸ்பிஐ வங்கிகளின் ஏடிஎம்களில் கொள்ளையடித்த அரியானா மாநில கொள்ளையவர்கள் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 3வது கொள்ளையனும் கைது செய்யப்பட்டு உள்ளதாக  காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களைக் குறிவைத்து கடந்த 17ஆம் தேதிமுதல் 19ஆம் தேதிவரை கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின. ஏடிஎம் அறையில் உள்ள பணம் போடும் இயந்திரத்தில்தான் இதுபோன்ற கொள்ளைகள் நடைபெற்றது தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவத்தன்போது ரூ.48 லட்சம் கொள்ளைப்போனதாக அறிவிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

சிசிடிவி காட்சியில் பதிவான அடையாளங்களை வைத்து விசாரணை நடத்தியதால்,  கொள்ளையர்கள் அரியானாவை சேர்ந்தர்கள் என்பது  தெரிய வந்தது. இதையடுத்து  தனிப்படையினர் அங்கு முகாமிட்டு, கொள்ளையர்களை தேடி வந்தனர். அங்கு அரியானா காவல் துறையினர் உதவியுடன் கடந்த வாரம் அமீர் முதலாவதாக கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து, அவரது கூட்டாளி வீரேந்தர் ராவத் ஆகியோரை கைதுசெய்தனர். இவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அமீர் கொடுத்த தகவலின்படி, இன்று 2வது கொள்ளையனை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட கொள்ளையனிடமிருந்து கொள்ளையடிக்கப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் அவரை சென்னைக்கு அழைத்துவரும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த ஏடிஎம் கொள்ளையில் 10 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாகவும், மீதமுள்ள ஏழு கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சி தொடர்கிறது என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.