சென்னை
சென்னை = சேலம் எட்டு வழிச்சாலை எதிர்ப்புக் குழுவினர் தமிழக அமைசர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை என எச்சரித்துள்ளனர்.
சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே அந்த திட்ட்த்துக்கு கடும் எதிர்ப்பு கிள்ம்பியது. இந்த சாலை அமைக்க மக்களில் பலருடைய விவசாய நிலங்கள் கையகப்படுத்த உள்ளதாகவும் மேலும் பல வனப் பகுதிகள் அழிக்கப்பட நேரிடும் எனவும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஆயினும் அரசு முன்னறிவிப்பின்றி விவசாய நிலங்களை கையகப்படுத்தின.
இந்த எட்டு வழிசாலை அமைப்பதை எதிர்த்து பாமக, எட்டுவழிச்சாலை எதிர்ப்புக் குழு உள்ளிட்ட பல அமைப்புக்கள் தொடர்ந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. அந்த தீர்ப்பில் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட சிலர் தேர்தல் நேரம் என்பதால் தாங்கள் மவுனமாக உள்ளதாகவும் தேர்தல் முடிந்ததும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என தகவல்கள் வந்தன.
இதனால் கோபம் அடைந்த எட்டு வழிச்சாலை எதிர்ப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “அதிமுக அமைச்சர்களுக்கு நாவடக்கம் தேவை அமைச்சர்களை அடக்கி வைக்க வில்லையென்றால் நாடாளுமன்றத் தேர்தல்களிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அதிமுக-பாஜக கூட்டணியை தோல்வி அடையச் செய்வோம்.
உயர் நீதிமன்றம் எட்டுவழிச்சாலைக்கு எதிராக ஆணை பிறப்பித்திருக்கும் சூழலில் விவசாயிகள் பெருமகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இதைக் காணப் பொறுக்காத அதிமுக அமைச்சர்கள் இத்தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்வோம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது நாவை அடக்க வேண்டும். மக்கள் விருப்பத்திற்கு எதிராக மேல்முறையீடு பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. இவரை நாவடக்கச் சொல்லி அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவுறுத்த வேண்டும்.
இல்லையெனில் விவசாயிகளின் வலிமை வரும் தேர்தல்களில் தெரியும். அமைச்சருக்கு நாவடக்கம் தேவை, இல்லையெனில் வரும் தேர்தலில் பாடம் கற்பிப்போம்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.