அடையாறு: போக்குவரத்து நெரிசல் மிக்க அடையாறில், மெட்ரோ ரயில் நிலையம் அருகே குடிநீர் குழாய் வெடித்து நீர் வெளியேறியதால், அதை சரி செய்ய குடிநீர் வாரியம் ஆழமான குழியை தோண்டி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அடைறில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்பட்ட பிறகு, அந்த பகுதியில் நிலத்தடியில் செல்லும்குடிநீர் குழாய்களில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு வருகிறது.  போக்குவரத்து மிகுந்த சர்தார் வல்லபபாய் பட்டேல் ரோட்டில் 4வது முறையாக தற்போது குடிநீர் குழாய் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த குடிநீர் வாரிய அதிகாரிகள்,  அந்தகுழாயில் செல்லும் தண்ணீர் போக்குவரத்தை நிறுத்தியதுடன், அதை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓஎம்ஆர் செல்லும் ராஜீவ்காந்தி சாலை, கிண்டிக்கு செல்லும் பிரதான சாலையான பட்டேல் சாலையின்  குழாயின் வெடிப்பை சரி செய்யும் பணிக்காக சாலையின் நடுவே சுமார் 8 அடி  ஆழத்தில் கடந்த இரு நாட்களாக பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.  இந்த பள்ளமான சாலையின் குறுக்கே இருப்பதால், அந்தபகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பிரபலமான இந்த சாலையில், விஐபிக்கள்  பயணிப்பதால், இந்த  பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு  என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்த பிரச்சினையை தவிர்க்க போக்குவரத்தை தற்காலிகமாக தடை செய்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த பகுதியில் ஏற்கனவே பலமுறை குடிநீர் கால்வாய் வெடித்து வருவதாகவும், 2020 நவம்பரில் கூட இதுபோல குடிநீர் குழாய் வெடித்துள்ள குற்றம் சாட்டும் அந்த பகுதி மக்கள் தற்போது 4வது முறையாக இந்த பகுதியில் குடிநீர் குழாய் வெடித்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் (சி.எம்.டபிள்யூ.எஸ்.எஸ்.பி) அதிகாரிகள், அடையாரில் உள்ள காந்தி நகரில் இருந்து ராஜீவ் காந்தி சாலை வரை ஓடும் சாக்கடையின்  பிரதான பாதைதான் பிரச்சினையின் ஆதாரம் என்று கூறியவர்,  அந்த இடத்தில் சாலை மூழ்கிப்போனதால் குழாய் சிதைந்ததுள்ளது. சரி செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.  இன்று போக்குவரத்துசாதாரண நிலைக்கு திரும்பி விடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.