சென்னை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏராளமான சாலைகள் சேதமடைந்துள்ள நிலையில், உடனே சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஓஎம்ஆரில் இருந்து இசிஆர் சாலையை இணைக்கும் பெரியார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், அதை உடனே சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள்  வலியுறுத்தி உள்ளனர். அதுபோல, நீலாங்கரை மற்றும் பாலவக்கம் வழியாக செல்லும்  பல சாலைகள் மழையால் மோசமாக சேதமடைந்துள்ளன, இவைகள் உடடினயாக சீரமைக்கப்பட வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ள நிலையில், மலையின் காரணமாக பல சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடந்து செல்லவே கஷ்டப்படும் நிலையில்,  வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

பெரும்பாலான வடசென்னை பகுதிகள் உள்பட, சென்னையின் முக்கிய சாலைகளான ஓஎம்ஆர் (ராஜீவ்காந்தி சாலை), இசிஆர் (கிழக்கு கடற்கரை), மற்றும் ஓஎம்ஆர், இசிஆர் இணைக்கும் சாலைகள் கடுமையாக சேதமடைந்து உள்ளன. அதுமட்டுமின்றி,  பாண்டியன் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை போன்ற பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்துள்ளது.

சாலைகளின் சேதம் காரணமாக, இருசக்கரம் மற்றும் 4 சக்கர வாகங்கள் செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் கால தாமதம் மட்டுமின்றி, விபத்துக்களும் ஏற்படுகிறது.

இதன் காரணமாக, சேதடைந்த சாலைகளை உடனே சீரமைக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.