மும்பை: கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில், முதலில் பேட்டிங் செய்துவரும் சென்னை அணி, சிறப்பாக ஆடிவருகிறது. அந்த அணி, 1 விக்கெட் மட்டுமே இழந்து, 16 ஓவர்களில் 155 ரன்களை எடுத்துள்ளது.
ருதுராஜை தொடர்ந்து, மற்றொரு துவக்க வீரர் டூ பிளசிஸும் அரைசதம் அடித்தார். அவர், தற்போது 67 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். அவருடன் ஜோடி சேர்ந்துள்ள மொயின் அலியும் அதிரடியாக ஆடிவருகிறார்.
சென்னை அணி, ஒரு ஓவருக்கு, 10 ரன்களுக்கு மேல் எளிதாக எடுத்து வருகிறது. இதேவேகத்தில் ரன் ரேட் தொடரும் பட்சத்தில், எளிதாக 220 ரன்களை அந்த அணி தொடும் என்பதே கணிப்பாக உள்ளது.
கொல்கத்தா தரப்பில், வருண் சக்ரவர்த்தி, 4 ஓவர்கள் வீசி, 27 ரன்கள் கொடுத்து, 1 விக்கெட் எடுத்துள்ளார்.