புதுடெல்லி:
க்கள் வாழ எளிதான நகரங்கள் தொடர்பாக மத்திய குடியிருப்பு மற்றும் ஊரக விவகாரத்துறை நடத்திய ஆய்வில் சென்னை 4வது இடத்தை பிடித்துள்ளது.

பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், மக்கள் வாழ எளிதான நகரங்கள் கொண்ட பட்டியலை மத்திய ஊரக விவகாரத்துறை அமைச்சகம் பட்டியல் வெளியிட்டுள்ளது. குடியிருப்புகள், சுத்தமான குடிநீர், அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள் பாதுகாப்பு உள்ளிட்டவையை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வெடுக்கப்பட்டது.

பெங்களுரூ முதல் பிடித்துள்ள இந்த பட்டியலில் சென்னை நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பத்தாவது இடத்தில் மும்பை உள்ளது.