சென்னை:
சென்னை மழை பாதிப்புகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, வேப்பேரி, பேரக்ஸ் ரோடு பகுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மழை வெள்ளத்தை வெளியேற்றத் துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்
இந்நிலையில், சென்னை மழை பாதிப்புகளைக் கண்காணிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் மழை பாதிப்புகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இன்று மாலை நடக்க ரிப்பன் மாளிகையில் நடக்க உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.