சென்னை துறைமுக வைப்பு நிதியில் முறைகேடு செய்தது தொடர்பாக  11 அதிகாரிகளை அமலாக்கத்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான ரூ.100 கோடி இந்தியன் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டதில் மோசடி நடந்ததுள்ளது கடந்த ஆண்டு தெரிய வந்ததுள்ளது. ஒரு கும்பல் பல்வேறு போலி ஆவனங்கள் மூலம் நிதியை முறைகேடாக எடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக அமலாக்க்ததுறை விசாரித்து வந்த நிலையில், தற்போது 11 பேரை கைது செய்துநடவடிக்கை எடுத்துள்ளது.

கோயம்பேடு இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2020ம் ஆண்டு சென்னை துறைமுகத்தின் சார்பில் நிரந்தர வைப்புக் கணக்கில் 100 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. பணம் போடப்பட்ட 3 நாட்களுக்குப் பின்னர் கணேஷ் நடராஜன் என்பவர் சென்னை துறைமுகத்தின் துணை இயக்குநர் என அறிமுகம் செய்துகொண்டு, பல்வேறு ஆவணங்களை வங்கியில் தாக்கல் செய்து, நிரந்தர வைப்பு கணக்கில் இருக்கும் 100 கோடியை இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அவர் தாக்கல் செய்த ஆவனங்களை சரிபார்த்த வங்கி நிர்வாகம் ரூ.100கோடி தலா 50 கோடி ரூபாயாக இரு நடப்பு கணக்குகளுக்கு மாற்றியது. இதைடுத்து, அந்த நபர், குறிப்பிட்ட அந்த நடப்பு கணக்குகளிலிருந்து 45 கோடி ரூபாயை 34 வங்கிக் கணக்குகளுக்கு அவர் மாற்றியுள்ளார்.

இது குறித்து அறிந்த  துறைமுக அதிகாரிகள், வங்கியுல் புகார் அளித்ததுடன், காவல்துறையிலும் புகார் அளித்தனர். அதன்பேரில், சிபிஐ, அமலாக்கத்துறையினர் வழக்குபதிவு செய்து  18 பேரைக் கைது செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய  முக்கியமான குற்றவாளிகளான சுடலை முத்து, விஜய் ஹெரால்ட், ராஜேஷ் சிங், கணேஷ் நடராஜன், மணிமொழி உள்ளிட்ட 11 பேரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

நீதிபதியையே அதிர வைத்த சென்னை துறைமுக ரூ. 100 கோடி மோசடி வழக்கு