சென்னை

ரவு நேர ஊரடங்கின் போது தடையை மீறி இயக்கப்பட்ட 517 வாகனங்களை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

வரும் 31 ஆம் தேதி வரை கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாகத் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது.   இதையொட்டி இரவு நேரங்களில் அத்தியாவசிய காரணங்கள் தவிர வேறு எதற்கும் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.   ஆயினும் சிலர் இரவு நேரத்தில் தேவை இல்லாமல் சுற்றி வருகின்றனர்.

எனவே இவர்கள்மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளனர்.   சென்னையில் காவல்துறையினர் 312 வாகனத் தணிக்கை சாவடிகள் அமைத்துக் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 3,174 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, ரூ.6.35 லட்சம் அபராதம் வசூலித்தனர். அன்று 1205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

காவல்துறையினர் இரவு ஊரடங்கை மீறும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வகையில் நேற்று முன்தினம் இரவு 517 வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியது தொடர்பாக 226 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.