வாட்ஸ் அப்பை ஹேக் செய்து நூதன முறையில் பணம் பறிக்கப்படுவதாக சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

இந்த நூதன மோசடி குறித்து காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, தங்களது செல்போனுக்கு தவறுதலாக ஆறு இலக்க WhatsApp ACTIVATION CODE-ஐ அனுப்பிவிட்டதாக பேசி, அதனை பெற்று, வாட்ஸ் அப்பை ஹேக் செய்வதாக கூறியுள்ளனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட நபரின் வாட்ஸ் அப் மூலம் அவரது உறவினர்கள், நண்பர்களை தொடர்புகொண்டு பணத்தை பறிப்பதாக எச்சரித்துள்ளனர்.

வாட்ஸ் அப் ஆக்டிவேஷன் கோடு கேட்டு யாரெனும் தொடர்புகொண்டால் உடனடியாக அழைப்பை துண்டிக்க வேண்டும் எனவும், வாட்சப் ஹேக் செய்யப்பட்டால் 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.