சென்னை: ஊரடங்கு தளர்வு வந்தாலும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூலை மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வில்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
அமைந்தகரை அண்ணா வளைவு பகுதியில் வாகன தணிக்கையை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது:
முழு ஊரடங்குக்கு மக்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.  சென்னையில் ஒவ்வொரு துணை ஆணையரும் வர்த்தகர்களுடன் ஆலோசனை செய்து அறிவுரை வழங்கி உள்ளனர். ஊரடங்கு தளர்வு வந்தாலும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று கூறினார்.