கொரோனா பாதுகாப்பு – தனி செயலியை உருவாக்கியுள்ளது சென்னை ஃபீனிக்ஸ் மால்..!

Must read

சென்னை: ஊரடங்கிற்கு பிறகு, சமூக இடைவெளி, தூய்மையான தரநிலைகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதிசெய்யும் வகையிலான ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது சென்னை வேளச்சேரியிலுள்ள ஃபீனிக்ஸ் மால்.

இந்தச் செயலியின் மூலம், அந்த மாலுக்கு வருகைதருவோர் தங்களின் ஷாப்பிங் திட்டமிடல்களை மேற்கொள்ள முடிவதோடு, அங்கிருக்கும் உணவகங்களில் தங்களுக்கான மேசைகளையும் பதிவுசெய்ய முடியும்.

மேலும், இந்த செயலியின்மூலம் மாலின் உள்ளே வருகைதருவோரின் நேரத்தையும் இது முன்னதாகவே உறுதிசெய்கிறது. மேலும், கோவிட்-19 பரவல் காரணமாக, வருகைபுரிவோர், பிறரை தொடர்புகொள்ளாமலேயே ஸ்மார்ட்ஃபோன் மூலமாகவே பொருட்களை வாங்க முடியும்.

இந்த செயலியின் பெயர் ‘Nhance’. ஒருவர் இந்த மாலுக்குள் நுழையும்போதும், அதிலிருந்து வெளியேறும்போதும் அந்த செயலியில் log in செய்ய வேண்டும். இதன்மூலம், வருகைபுரிந்தவர் பின்னாளில் நோயால் பாதிக்கப்பட்டால், மால் நிர்வாகத்திற்கு தொடர்பைக் கண்டறிவது எளிதாக இருக்கும்.

More articles

Latest article