சென்னை:
கொரோனா பரவல் காரணமாக வங்கிகளில் குறைவான நபர்களே பணியாற்றி வருவதால், பென் வாங்கும் முதியோர் பெரும் அவஸ்தைக்குள்ளாகி உள்ளனர்.
கொரானா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் அத்தியாவசிய தேவைக்கான கடைகள், வங்கிகள் இயங்கி வருகின்றனர். தொடக்கத்தில் 4 மணி நேரம் மட்டுமே இயங்கி வந்த வங்கிகள் 1ந்தேதி முதல் முழு பணி நேரமும் இயங்கி வருகிறது.
ஆனால், கொரோனா பரவல் மற்றும் போக்குவரத்து வசதியின்மை காரணமாக குறைவான ஊழியர்களே வங்கிகளில் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக பென்சன் வாங்க வரும் முதியோர் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டு உள்ளது. அவர்கள் அமர்வதற்குகூட எந்தவொரு வசதியும் செய்துதரப்படவில்லை.
சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியதிருப்பதாலும், வங்கியின் உள்ளே ஒவ்வொருவராக அனுப்பி அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவதாலும், வங்கியில் குறைந்த ஊழியர்களே பணியாற்றி வருவதாலும், நாள் ஒன்றுக்கு சிலருக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. பலரை நாளைக்கு வாருங்கள் என்று திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
இதன் காரணமாக பல மணி நேரம் வங்கி வாசலில் காத்திருக்கும் முதியோர்கள், பென்சன்தாரர் கள் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி உள்ளனர். அதுபோல ஜன்தன் கணக்கு வைத்துள்ளவர்கள், அரசு வழங்கியுள்ள பணத்தை எடுக்க வந்தாலும், அவர்களை பிறகு வாருங்கள் என்று திரும்பி அனுப்பும் அவலங்களும் அரங்கேறி வருகின்றன.
வங்கி நிர்வாகமும், அரசுகளும் அவர்களுக்கு உரிய தொகையை வீடுகளுக்கு சென்று வழங்க முயற்சி செய்யலாமே.