புதுடெல்லி:

நான்காம் ஊரடங்கு நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தின் 6 நகரங்களுக்கு இதில் இருந்து விலக்கு இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. நாளையுடன் இந்த ஊரடங்கு முடிய இருக்கும் நிலையில், நான்காம் ஊரடங்கு கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

பல கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இந்த ஊரடங்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை, மும்பை, அஹமதாபாத், தானே, டெல்லி, இந்தூர், புனே, கொல்கட்டா, ஜெய்ப்பூர்,நாஷிக், ஜோத்பூர், ஆக்ரா, திருவள்ளூர், ஆரங்காபாத், கடலூர், ஹைதராபாத், சூரத், செங்கல்பட்டு, அரியலூர், ஹவுரா, குர்னூல், போபால், அம்ரிஸ்டர், விழுப்புரம், வதோதரா, உதைய்பூர், பால்கர், பார்ஹம்புர், சோலாபுர் மற்றும் மீரட் ஆகிய நகரங்களுக்கு இந்த ஊரடங்கில் விலக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 80 சதவிகிதம் கொரோனா பாதிப்புகள் இந்த 30 மாநகராட்சி / நகராட்சிகளில் பதிவாகியுள்ளன.  தமிழகத்தின், சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 6 மாநகராட்சி / நகராட்சிகளுக்கு ஊரடங்கில் விலக்கு இருக்காது.