புதுடெல்லி: சென்னைக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.
டேவிட் வார்னர் 55 பந்துகளில் 57 ரன்களும், மணிஷ் 46 பந்துகளில் 61 ரன்களும் அடித்து அவுட்டானார்கள். ஆனால், பிந்தைய ஓவர்களில் வந்த கேன் வில்லியம்சனும், கேதார் ஜாதவும் அதிரடியாக ஆடினர்.
வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்களையும், ஜாதவ், 4 பந்துகளில் 12 ரன்களையும் அடிக்க, ஐதராபாத்தின் எண்ணிக்கை, கடைசி ஓவர்களில் விரைவாக உயர்ந்தது.
சென்னை தரப்பில், ஷர்துல், 4 ஓவர்கள் வீசி, விக்கெட் இல்லாமல், 44 ரன்களை வாரி வழங்கினார். லுங்கிக்கு மட்டும் 2 விக்கெட்டுகள் கிடைத்தன.