சென்னை: நாட்டின் அதிவேக ரயில்ன வந்தே பாரத் ரயில், சென்னை – மைசூரு இடையே நவம்பர் 10ந்தேதி தொடங்கப்படுகிறது. இது நாட்டின் 5வது வந்தே பாரத் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமாா் 160 கி.மீ. வேகத்தில் பயணிக்க அதிவேக ரயிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவை கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக 2022-23ம் ஆண்டு பட்ஜெட்டில் 400 வந்தே பாரத் ரயில் அடுத்த 3 ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். மின்சார சேமிப்புடன், பயண நேரத்தை மிச்சப்படுத்தும், அதிகவேகமான, எதிர்காலத் தலைமுறையினருக்கான ரயில் என்று கூறப்பட்டது.
ஆனால், தற்போதுவரை 4 ரயில்களின் சேவை மட்டுமே தொடங்கி உள்ளது. 5வது ரயில் சேவையாக சென்னை மைசூர் இடையே வந்தேபாரத் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும்.
இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என்று கூறப்படுகிறது.