கற்பகேஸ்வரர் திருக்கோவில்,முகப்பேர், சென்னை

சென்னை அண்ணா நகருக்கு அருகிலுள்ள மொகப்பேரில் அமைந்துள்ளது. மொகப்பேர் பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் இதுவும் ஒன்று.
மூலவர் கர்ப்பேஸ்வரர் என்றும், தாயார் கற்பக சௌந்தரி என்றும் அழைக்கப்படுகிறார்.
பூமிக்கடியில் அருள்மிகு கற்பேகஸ்வர பெருமாளின் திவலிங்கத் திருமேனி மற்றும் நந்தியெம்பெருமானின் சிவாவிக்ரஹங்கள் கிடைக்கப் பெற்றது.
தொல்பொருள் ஆராய்ச்சி துறையினர் இந்த சிவலிங்கத் திருமேனியை பார்வையிட்டு ஆராய்ந்து சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சிவலிங்கம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவிலில் கற்பகவிநாயகர், கற்பேகஸ்வரர், கற்பகசௌந்தரி அம்பாள், கனகதுர்க்கை, நவக்கிரஹ நாயககர்கள், சண்டிகேஸ்வரர், சுவாமி மோஸ்டத்தில் பால முருகன், ஐயப்பன், தட்சிணமூர்த்தி, மஹா விஷ்ணு, பிரம்மா, ஸ்தலவிருட்சம் அரசமரத்தில் விநாயகர், கருமாரி அம்மன், நாக கன்னிகள் மூவர், சன்னதிகள் உள்ளது.
கேட்டவர்க்கு கேட்டதைக் கொடுக்கும் கற்பகேஸ்வரர் பெருமான் பக்தர்களின் வேண்டுகளை ஏற்று, கற்பக விருட்சமாக வாரி வழங்குகிறார்.
தங்களது கோரிக்கைகள் விரைவில் நிறைவேறியதாக பக்தர்கள் பலர் தெரிவிக்கின்றனர்.
குழந்தைப்பேறு கிடைக்காதவர்கள் ஆடிப்பூரத்தன்று கற்க சௌந்தரியை வழிபட்டு, அம்பிகையின்மடியில் வைத்த முளைப்பயிறு பிரசாதத்தினை சிவாச்சாரியார் அவர்களிடம் பெற்று அருத்தி குழந்தைப் பேறு பெற்று பலர் பயன்பெற்று வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை. ✍🏼🌹