மும்பை: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியை வென்றதன் மூலம், ஐபிஎல் புள்ளிப் பட்டியலில், முதலிடத்திற்கு முன்னேறியது சென்னை அணி.
4 போட்டிகளில், 3ல் வென்று, மொத்தம் 6 புள்ளிகளைப் பெற்ற சென்னை அணி, ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்திற்கு வந்துள்ளது. பெங்களூரு அணி, 6 புள்ளிகளுடன், ரன்ரேட் அடிப்படையில் இரண்டாமிடத்திலும், டெல்லி அணி, 6 புள்ளிகளுடன், ரன்ரேட் அடிப்படையில் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
மும்பை அணி, 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஐதராபாத் அணி, 2 புள்ளிகளுடன், ரன்ரேட் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.
ஆறாவது இடத்தில் கொல்கத்தா அணியும், ஏழாவது இடத்தில் ராஜஸ்தான் அணியும், எட்டாவது இடத்தில் பஞ்சாப் அணியும் உள்ளன.