சென்னை
மெட்ரோ ரெயில் நிலையங்களில் விரைவில் ஷாப்பிங் மால்கள் அமைக்கப்படவுள்ளன
சென்னை நகரில் தற்போது மெட்ரோ ரெயில்கள் வேலை நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயக்கப்பட்டு வருகின்றன. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் காலை 8 முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகின்றன. வேலை நாட்களில் சுமார் 30 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர். விடுமுறை நாட்களில் மேலும் 20% பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர். “மெட்ரோ ரெயில் தற்போதுள்ள நிலையில் இயங்க செலவாகும் தொகையில் 50%க்கும் குறைவாகவே கட்டண வசூல் உள்ளது. இதனால் மேலும் பயணிகளை ஈர்க்க வேண்டிய நிலையில் மெட்ரோ உள்ளது. மொத்தச் செலவில் மின்சாரத்துக்கே பாதிக்கு மேல் செலவிட வேண்டி உள்ளது.
இதனால் பயணிகளை ஈர்க்க பரங்கிமலை, எழும்பூர், செண்டிரல் போன்ற முக்கிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்கள் அமைக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இது தவிர ஈக்காட்டு தாங்கல், அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலையங்களை ஒட்டி புதிய கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன. இவற்றை தனியார் வாடைகைகு பெற்று ஷாப்பிங் மால்கள் அமைக்க முடியும். இந்த திட்டத்தில் தற்போது ஈக்காடு தாங்கலில் கட்டிடம் கட்ட சிஎம்டிஏ அனுமதி பெறப் பட்டுள்ளது.
ஏற்கனவே டில்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஷாப்பிங் மால்கள் செயல்பட்டு வருகின்றன. இட வசதி உள்ள எல்லா மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் ஷாப்பிங் மால்கள் அமைக்க முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறோம். இது தவிர விரைவில் எழும்பூர் – செண்டிரல் – விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில் சேவை துவங்க உள்ளது. அதன் பின் பயணிகள் எண்ணிக்கை 2 லட்சம் வரை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.” என தெரிவித்துள்ளார்.