சென்னை: ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமறை நாட்களிலும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னையில் மெட்ரோ ரயில்கள் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 28 ஆம் தேதி வரையிலான ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் கூட்டம் அதிகரிப்பை தொடர்ந்து, சேவைகளும் கூட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாளை முதல் ஞாயிறுதோறும் மற்றும் அரசு பொது விடுமறை நாட்களிலும் இனி காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.   ஏற்கனவே 9 மணி வரை இயக்கப்பட்டு வந்த மெட்ரோ ரயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.