சென்னை:

சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் வருகை அதிகரித்து வரும் நிலையில்,  மெட்ரோ ரயில் இயக்கப்படும் சேவையை அதிகரிக்க இருப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

தற்போது மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு பிறகே தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடைகிறது. இந்த சேவையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம், அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது சென்னையில்,  சென்னை விமான நிலையம் முதல் சென்னை சென்ட்ரல் வரையும், வண்ணாரப்பேட்டை மற்றும் பரங்கிமலை – சென்ட்ரல் இடையே, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படு கின்றன. தற்போது, சென்னை சென்ட்ரலில் இருந்து, விமான நிலையத்துக்கு, அதிகாலை, 5:56 மணியில் இருந்து, இரவு, 10:08 மணி வரையும், விமான நிலையத்தில் இருந்து, சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை, 5:54 மணியில் இருந்து, இரவு, 10:06 மணி வரையும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதை மேலும் 1.30 மணி நேரம் முன்கூட்டியே இயக்க முடிவு செய்துள்ளது. பயணிகளின் கோரிக்கையை தொடர்ந்து அதிகாலை, 4:30 மணியில் இருந்து இரவு, 11:00 மணி வரை, விரைவில் நீட்டிக்கப்பட உள்ளது. இந்த நீட்டிப்பில், அதிகாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை, அரை மணி நேர இடைவெளியில், ரயில் இயக்கவும், பயணியர் வருகையையொட்டி, ரயில்கள் எண்ணிக் கையை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.