சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது.
இந்த திட்ட பணிகளுக்காக சென்னையில் ஏற்கனவே 110 இடங்களில் சாலை தடுப்பு வைக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது.
இதனால் சென்னையின் மய்யமாக உள்ள அண்ணாசாலையை கடந்து நகரின் மற்ற பகுதிக்கு செல்பவர்களுக்கு பயண நேரம் 10 முதல் 30 நிமிடம் கூடுதலாகிறது.
குறிப்பாக, மாம்பலம், தி.நகர், ஆகிய இடங்களைக் கடந்து மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, அடையாறு போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் மலைப்பாதையில் செல்வது போல் பல கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
தவிர, மவுண்ட் பூந்தமல்லி சாலையில் டிஃபன்ஸ் காலணி அருகே நசரேத்புரம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு இரவு நேரங்களில் போதுமான பாதுகாப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் வில்லிவாக்கம், அடையாறு மற்றும் துரைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் 2026 வரை போக்குவரத்து மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், தனியாருக்கு சொந்தமான நிலத்தை வாடகைக்கு எடுத்து, பாதையை விரிவுபடுத்துகின்றனர்.
இருப்பினும், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் மாற்றுப்பாதைகளை செயல்படுத்துவதற்கு முன், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஆலோசனை கேட்கப்படுவதில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சென்னையில் முக்கிய பேருந்து நிறுத்தங்களை இடமாற்றம் செய்ய முடிவு… போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு…