சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி முதல் லைட் ஹவுஸ் வரையிலான 4வது வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரையிலான மெட்ரோ ரயில் பாதை திட்டத்தில் உயர் தூண்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளதாக மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் போரூர் சந்திப்பு வரையிலான 8 கி.மீ. நீள ரயில் பாதையில் 4 இரட்டை அடுக்கு ரயில் நிலையங்கள் மற்றும் 5 ஒற்றை அடுக்கு ரயில் நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெட்ரோ ரயிலின் இந்த கட்டமைப்பு மற்றும் வழித தட தூண்களை தாங்கும் வகையில் பிரம்மாண்ட தூண்கள் அமைக்கும் பணிகள் நூறு சதவீதம் தற்போது முடிவடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தூண்களை அமைகக 24.45 கி.மீ. நீளத்துக்கு தற்போது பொதுப் பயன்பாட்டிலுள்ள உயர் மின் விநியோ கம்பிகள், குடிநீர் குழாய்கள், தொலைத் தொடர்பு கேபின்கள், மழைநீர் வடிகால்கள் போன்றவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் 1.5 கி.மீ. நீளத்துக்கு நீர் வழிப்பாதையை நீர் வெளியேற்றத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் மாற்று வழி மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ள மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையே கோடம்பாக்கம் பவர்ஹவுஸ்-போரூர் சந்திப்பு வரை தூண்கள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.