சென்னை: சென்னையில்  இயக்கப்பட்டு வரும மெட்ரோ ரயில் பயணம் செய்ய புதிதாக அறிமுகப்படுத்துள்ள மெட்ரோ ரயில் செயலி மூலம், பயண  டிக்கெட் எடுத்தால் 10% முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தினசரி 1லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இதையடுத்து, அதிகமான சேவைகளை இயக்கி வரும் மெட்ரோ ரயில் நிர்வாகம், தற்போது பயணிகளின் வசதிக்காக பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
அதன்படி, தற்பேது, சென்னை மெட்ரோ ரயில் என்ற புதிய செயலி (Chennai Metro Rail App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலின் மூலம் தினசரி டிக்கெட்டுகள் மற்றும் மாதாந்திர பாஸ் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது/

இந்த செயலி மூலம் டிக்கெட் எடுத்தால் 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி பயண டிக்கெட்டுக்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும்.  கியூ.ஆர். கோடு மூலம் டிக்கெட் எடுத்தால் 20 சதவீதம் வரை தள்ளுபடியும் மற்றும் அரசு விடுமுறை தினங்களில் 50 சதவீதம் தள்ளுபடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

உதாரணமாக விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டுமென்றால் 70 ரூபாய் டிக்கெட் கட்டணம் ஆகும். ஆனால் கியூ ஆர் மூலம் டிக்கெட் எடுத்தால் ரூபாய் 56 ரூபாய் மட்டுமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தள்ளுபடி காரணமாக மெட்ரோ ரயிலின் செயலின் மூலம் அதிக பயணிகள் டிக்கெட்டுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.