சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டம் விரிவாக்கத்தின்போது, 5வது வழித்தடத்தில் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்காக ரூ.168 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்து உள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடம் சென்னை மாநகரத்தை முழுமை யாக கவர் செய்கிறது. அதாவது, மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை ( 45.4கி.மீ ) 3-வது வழித்தடமும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரை ( 26.1 கி.மீ. ) 4-வது வழித்தடம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல் மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை ( 44.6 கி.மீ. ) 5-வது வழித்தடமும் செயல்பட போகிறது. இந்த மூன்று வழித்தடங்களில் மொத்தம் 119 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் ரூ.63 ஆயிரத்து 246 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த நிலையில், சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்காக ரூ.168 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனரும், ஜாக்சன் லிமிடெடு ( Jakson Limited) நிறுவனத்தின் துணைத் தலைவர் அங்கூர் கோயல் ஆகியோர் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதுமு. அதன்படி, இந்த வழித்தடத்தில், மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , “சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் 2 வழித்தடம் 5-ல் மாதவரம் பால் பண்ணை நிலையம் முதல் கோயம்பேடு 100 அடி சாலை நிலையம் வரை 10 உயர்மட்ட நிலையங்கள் மற்றும் 6 சுரங்கப்பாதை மெட்ரோ ரெயில் நிலையங்களில் மின்சாரம், தீ பாதுகாப்பு, காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் (VAC) போன்ற மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் M/s Jakson Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் (அமைப்புகள் மற்றும் இயக்கம் ராஜேஷ் சதுர்வேதி), M/s Jakson Limited நிறுவனத்தின் துணைத் தலைவர் (EPC business) அங்கூர் கோயல் ஆகியோர் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.