சென்னை:

குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் கடல் சீற்றம் உள்ளதால், அடுத்த 48 மணி நேரங்களுக்கு அந்த பகுதியில் மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, சென்னை வானிலை மைய  இயக்குநர் பாலச்சந்திரன்,

தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதன் காரணமாக  அடுத்த 48 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால், அந்த பகுதிகளுக்கு 30-ம் தேதி வரை மீனவர்கள்  மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்த்துளளார்.

சென்னை மற்றும் புறநகரை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறினார்.