சென்னை: சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சி! சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது  என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) சாா்பில் 49-ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் புத்தககக் காட்சி நடைபெறும் என பபாசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். நிகழாண்டில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைக்க உள்ளதாகவும், பல்வேறு துறைசார் அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முறை பொங்கல் விடுமுறை நாள்களையொட்டி புத்தகக் காட்சி திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 7-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. வார நாள்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வார இறுதி நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக் காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

t இந்த நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள பன்னாட்டு புத்தக் காட்சிக்காண இலட்சினையை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.  பின்னர் நிகர்ச்சியில் பேசிய  அமைச்சர் அன்பில் மகேஸ் , ”சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தக் காட்சி நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி, 16,17,18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக் காட்சி நடைபெறும்” என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 – ஜனவரி 16 முதல் 18 வரை, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நான்காவது ஆண்டில் தனித்துவமான B2B தளம் செயல்படவுள்ளது.

இதன்மூலம் பதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இலக்கிய முகவர்கள் நேரடியாக கலந்துரையாடி காப்புரிமை மற்றும் இலக்கியப் பரிமாற்றங்களை மேற்கொள்ளலாம். பொதுமக்கள் பங்கேற்கும் சிறந்த தளமாக B2B அமையும்! இந்தாண்டு மதிப்புறு விருந்தினராக Frankfurt Book Fair ஒருங்கிணைப்புக் குழு அழைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடல்கள், கண்காட்சிகள், கலாசார நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். தமிழை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்வோம்! உலக இலக்கியங்களைத் தமிழுக்குக் கொண்டு வருவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.