சென்னை: சென்னையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெறுகிறது என கல்வி அமைச்சர்  அன்பில் மகேஷ் அறிவிததுள்ளார்.

 தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்த கண்காட்சி 2026ம் ஆண்டு ஜனவரி 7ந்தேதி தொடங்குகிறது.  பபாசியின்  49-வது சென்னை புத்தகக் கண்காட்சி, ஜனவரி 7 முதல் 19 வரை (13 நாட்கள்) நந்தனம் YMCA திடலில் நடைபெறுகிறது.

இந்த புத்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்; புத்தகப் பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த கண்காட்சி, தள்ளுபடி விலையில் பல பதிப்பக புத்தகங்கள் கிடைக்கும் மேலும்,  அனைத்து பதிப்பகங்களின் புத்தகங்களும் ஒரே இடத்தில் கிடைக்கும். 

இந்த நிலையில், புத்த கண்காட்சியின் கடைசி 3 நாட்கள்  பன்னாட்டு புத்தகக் கண்காட்சி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொது நூலக இயக்குநரகம் ஏற்பாடு செய்த சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி மற்றும் ஜனவரி 16 முதல் 18 வரை ரை 3 நாட்கள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்து உள்ளார்.

இந்த  சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் 100 நாடுகள் பங்கேற்க உள்ளன; 120 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன என்றும் தெரிவித்தார்.