சென்னை:  ஜனநாயகன்  படத்திற்கு தடை விதித்துள்ள சென்சார் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று உயர்நீதிமன்றம் அமர்வு தீர்ப்பு வழங்குகிற,.

தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கின் தீர்ப்பினை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அறிவிக்க உள்ளது.

தவெக தலைவர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் மற்றும் சென்சார் குழு இடையேயான சட்டமோதல் அதன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான இரண்டு தரப்பு வாதங்களும் முடிவடைந்து தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இன்று காலையில் முதல் வழக்காக ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் தொடர்பான வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

அதன்படி வழங்கும் தீர்ப்பானது அரசியல் சார்ந்த படமாக உருவாகியுள்ள விஜயின் ஜனநாயகன் உடனடியாக சான்றிதழை பெற்று திரையரங்குகளில் வெளியாகுமா? அல்லது மேல்முறையீடு மூலம் மீண்டும் தாமதத்தை எதிர்கொள்ளுமா? என்பதை இறுதி செய்ய உள்ளது.

வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமர்வு ஒற்றை கருத்தை எட்டி ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கலாம். அல்லது ஒருவர் இருவேறு மாதிரியான தீர்ப்புகளும் அறிவிக்கப்படலாம். அப்படி மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டால், வழக்கு உடனடியாக முடிவுக்கு வராமல் மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு மாற்றப்படும். அவர் இந்த வழக்கை மீண்டும் விசாரித்து, இரண்டு தரப்பு கருத்துகளையும் கேட்டறிவார். அதன் பிறகு இறுதி தீர்ப்பை அறிவிப்பார். கணிப்புகளின்படி பிளவுபட்ட தீர்ப்புக்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் ஜனநாயகன் திரைப்பட வழக்கில் ஒருமித்த முடிவுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக சட்ட வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

முன்னதாக, இந்த படத்திற்கு கடந்த 2025ம் ஆண்டு   டிசம்பர் மாதம் படத்தை தணிக்கை குழு  U/A சான்று வழங்கப்படும்  தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகும் அறிவிக்கப்பட்டன. இதற்கிடையில் புகாரின் பேரில்,  இந்த படத்திற்கு சென்சார் வழங்குவதை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதாக சென்சார் போர்ட் தெரிவித்துள்ளது.

இதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் சென்னை உச்சநீதிமன்றத்தை நாடியது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உத்தரவிட்டார். அதனை எதிர்த்து தணிக்கை வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

[youtube-feed feed=1]